வலைப்பதிவு தொகுப்புக்கள்

ஆங்கில மருந்துகள் இப்போது குறைந்த விலையில் வாங்க முடியும்.

ஆங்கில மருந்துகள் இப்போது குறைந்த விலையில் வாங்க முடியும்.

மருத்துவர்கள் மருந்துகளை எப்போதும் அதன் நிறுவனத்தின் பெயரை கொண்டே எழதுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்கள்.
மருத்துவர்கள் மருந்துகளின் “இனப்பெயர்” கொண்டு அழைப்பதும் இல்லை.
எந்த வகை மருந்தாக இருந்தாலும் அதற்க்கு ஒரு இனப்பெயர் இருக்கும் மேலைநாடுகளில் மருந்துகளை இனப்பெயர் மட்டுமே மருந்து சீட்டில்(மருந்து குறிப்பு) எழுத வேண்டும்.
அனைத்தும் ஒரே குணம் உடையவை.
பின்பு ஏன் இந்த மருந்து நிறுவனத்தின் பெயரை எழுதுவது எதற்கு?
இங்கு தான் மக்களை ஏமாற்றும் செயல் நடக்கிறது. கரணம் பணம். நாம் கடையில் வாங்கும் மருத்துக்கு எவ்வாறு மருத்துவர் பயன் பெறுவார். அனைத்து ஊருகளுக்கும் ஒரு மருந்து நிறுவனத்தின் முகவர் இருப்பார் அவர் மூலம் மட்டுமே மருத்துக்கள் மருந்து கடைகளுக்கு செல்லும். எந்த பகுதியில் விற்பனை அதிகம் நடக்கிறதோ அங்கு உள்ள மருத்துவர்களுக்கு ஒரு பங்கு தரப்படும்.
இந்திய சட்டத்தின் அடிபடையில் ஒரு நோயாளிக்கு இனப்பெயர் கொண்டு மருந்து சீட்டு கேட்க உரிமை உள்ளது.
இல்லை அவரிடம் கேட்க தயக்கம் கட்டினால www.mediguideindia.com என்ற முகவரிக்கு சென்று மருந்துகளின் விலை அதன் மாற்று நிறுவனத்தின் மருத்து விலைகளை பார்க்கலாம்.
எடுத்துகாட்டாக METOCARD XL 50 இன் விலை 62 ரூபாய் ஆனால் அதே மருந்து வேறு ஒரு நிறுவனத்தில் MEPOL என்னும் பெயரில் 7 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
எச்சரிக்கை: மருத்துக்களின் நிறுவனத்தை மாற்றி வாங்கும் பொது சரியான மருந்துகளை தேர்வு செய்யவும். மேலும் உதவிக்கு மருந்தாளுனரிடம் கேட்கவும்.
மருத்துவம் என்பது சேவை அதை மனதில் கொண்டு மருத்துவர்கள் செயல்பட்டால் எவ்வகை மருத்துவமும் ஏழைகளுக்கு சாத்தியமாகும்.

இதனை உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது

பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நோட்டின் அட்டையில் இருந்த ஆங்கில கவிதை..!
விடுதியில் சேர்ந்து இருந்தபோது என் அம்மாவை நினைவுக்கு கொண்டு வந்தது…!